சமீபத்தில் இந்தப் பாடல் அடிக்கடி என் காதில் விழுகிறது. அடிக்கடி முணுமுணுக்கிறேன். பேருந்தில் ஒருமுறை அருகிலிருந்தவரின் மொபைலில் ரிங் டோனாக ஒலித்து வியப்பூட்டியது. எந்தப் படத்தில் என்று பலரிடம் கேட்டுப்பார்த்தும் பதிலில்லை. யார் இசையமைத்தது என்று தெரியவில்லை. பாடியவர் குரலும் பரிச்சயமில்லாதிருக்கிறது.
ஆனால் சுண்டியிழுக்கிறது. வீட்டில் என் குழந்தை விரும்பிக் கேட்கிறது. மற்ற பல குழந்தைகளுக்கும் விருப்பமான பாடலாக இது இருப்பது தெரிகிறது. இந்தப் பாடலின் ஈர்ப்பு புன்னாகவராளியில் மட்டுமில்லை. பின்னணி இசையில் சில புராதன வாத்தியங்களின் ஒலிகளுக்கு நவீன கருவிகளின்மூலம் மறுபிறப்பளித்து, சரியாகச் சேர்த்திருப்பது கிறங்கவைக்கிறது.
இதன் இசையமைப்பாளர் யார் என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா? கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.
இங்கு போய் பார்க்கவும்.
http://in.youtube.com/watch?v=fpl5R49L984&feature=related
ஆல்பம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரண்டு பேர் என்ற படத்திலிருந்து, ஆபாவாணன் எழுதியது. அனு மாலிக் இசை.
மன்னிக்கவும் சுனில் வரம் என்பவர்தான் இசை
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. பட்டயக் கிளப்பும் பாட்டு. படம் தாமிரபரணி. படத்தில் இந்தப் பாட்டு இல்லை. (இவை தவறாகவும் இருக்கலாம். :P) இப்போது இது அடைந்திருக்கும் ஹிட்டை நினைத்து, இந்தப் பாட்டைச் சேர்க்காமல் போனோமே என தயாரிப்பாளர் நொந்திருப்பார். இந்தப் பாடலை வைத்து கார்ட்டூன் ரீமிக்ஸ் ஒன்று வந்தது; அது செம ஹிட் என்றும் ஒரு நண்பர் சொன்னார். அதை நான் இன்னும் பார்க்கவில்லை. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் முதல் காட்சியில் இந்தப் பாடல் நான்கு வரிகள் வரும். எங்கள் வீட்டு சிறிசுகள் எல்லாம் அந்தப் பாட்டைக் கேட்டதும் குதிகுதியென்று குதித்தார்கள். அவ்வளவு ஹிட் அந்த கார்ட்டூன் மிக்ஸ்.
http://tamizh2000.blogspot.com/2008/06/2.html.
Here you can get all details about this song.
Regards
Krishnanand
க்ரேஸி ஃப்ராக் ஆல்பத்தை டப் செய்து தமிழில் டிவிடியாக கொண்டு வந்திருக்கிறார்கள். அத்தொகுப்பில் இந்தப் பாடல் கலக்கலான அனிமேஷனாக உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. என்னிடம் டிவிடி இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு வேண்டுமானால் காப்பி செய்து தருகிறேன் 🙂
பி.கு. : சொல்ல வெட்கமாக இருக்கிறது, தினமும் டிவிடியில் ஒருமுறையாவது இந்தப் பாட்டை பார்த்து, கேட்டு, ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
பா.ரா. ஸார்..
மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தயாரித்த கார்ட்டூன் ஆல்பத்தின் இருக்கும் பாடல்தான் இந்த வாரான் வாரான் பூச்சாண்டி என்று எனது அலுவலகத் தம்பிமார்கள் சொல்கிறார்கள்.
நான் இதுவரையிலும் கேட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன்..
ஆல்பம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்
http://thenkinnam.blogspot.com/2008/03/blog-post_30.html
வாரான் வாரான் பூச்சாண்டி
‘இரண்டு பேர்’ – படத்தில் இடம்பெற்றது இந்தப் பாடல். சுனில் வர்மா இசையில், ஆபாவாணன் பாடிய இது.
நன்றி திரு. பா. ராகவன். அவர்களே
பாட்டைக் காண்பதற்கும், கேட்பதற்கும் இங்கே செல்லலாமே
பாகம் 1
பாகம் 2
varaan_varaan_poochandi
Movie Irandu Paer
Music Sunil Varma
Singer Aabavannan
Link to listen the song
http://www.oosai.com/tamilsongs/irandu_paer_songs.cfm
பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இரண்டு பேர் என்கிற படம் எப்போது வந்தது? வந்ததா?
//பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இரண்டு பேர் என்கிற படம் எப்போது வந்தது? வந்ததா?//
“By 2” என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் தமிழக அரசின் சலுகைக்காக இரண்டு பேர் ஆகியது 🙂
இரண்டே பேர் மட்டும் நடித்த படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு மூன்று நாள் ஓடியதாக நினைவு. உட்லண்ட்ஸ் பிரமிட் தியேட்டரில் கூட ரிலீஸ் ஆனது!!
படத்தின் பெயர்.. ‘இரண்டு பேர்’. ஆபாவாணன் படம்தான் இது. பாடலைப்பாடியவரும் அவரே. இந்த நிமிடம் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி லேபில் தூங்கிக் கொண்டிருக்கிறது படம்!
ஆம்.. உலகத்திரைக்காட்சிகளில் இன்னும் வெளிவராத படம் இது!! இனியும் வருமா என்பதும் சந்தேகமே. காரணம்.. படத்தில் நடித்தபோது குஷ்பு, ரோஜாவுக்கெல்லாம் கல்யாணமே ஆகியிருக்கவில்லை. பாக்கியிருக்கும் காட்சிகளை இப்போது எடுப்பதானால் கண்டினியுட்டி கழுதை உதைக்கும்.
படைப்பாளியின் அனுமதியோ அல்லது பெயர் மரியாதையோ இன்றி பாடலைச் சுட்டு, அதற்கான காட்சிகளையும் ஆங்கில அனிமேஷன் படங்களில் இருந்து சுட்டெடுத்து வெட்டி ஒட்டி புத்தம்புதிய காப்பியாக்கியிருக்கிறார்கள்!
‘இருவர்’ எனப் பெயர் மாற்றம் பெற்ற ‘By 2’ வுக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தம் இல்லை.
கௌதம், தகவலுக்கு நன்றி. இன்றைக்கு வெளிவருகிற புதிய திருட்டு டிவிடி மற்றும் விசிடிக்கள் பெரும்பாலானவற்றில் படம் தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பிறகும் இந்தப் பாடல் இடம்பெற்றிருப்பதைச் சமீபத்தில் கண்டேன். குழந்தைகளுக்குப் பிடித்த பாடல் இருப்பதை மேலே படம் போட்டும் காட்டிவிடுகிறார்கள். படம் பிடிக்காதவர்கள்கூட இந்தப் பாடலுக்காக வாங்கிச் செல்வார்கள் போலிருக்கிறது.
http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=1038&cls=row3&ncat=TN
2003ல் அந்தப் படம் வந்திருக்க வேண்டும்.குஷ்பு,ராம்கி,சங்கவி
நடித்தது.வந்த மாதிரி தெரியவில்லை.ஆபாவாணன் ஒரு படம்
எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தார்.அந்தப் படத்திற்கு வசனம்
எழுதிய இந்துமதி படத்தின் தயாரிப்பிற்கு உதவியதால் நஷ்டமடைந்தார்.பின்னர் கங்கா-யமுனா-சரஸ்வதி என்ற
சீரியலை எடுத்தார்.
http://www.cinemaexpress.com/archaics/150203/cinimini/cinimini5.asp
ஜூலை 2008ல் செக் மோசடி, அதாவது கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுத்த வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை
பெற்றார்.சுட்டி மேலே.குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க
முடியவில்லை. ஒரு காலத்தில் ஆபாவாணன் திரையுலகில்
புதிய அலையை கொண்டு வந்தார்.சில படங்கள், பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டவை, தோல்வியுற்றதால் நொடித்து விட்டார்.
சுனில் வர்மா. க்யான் வர்மாவின் மகன்.க்யான் வர்மா, மனோஜ்-க்யான் என்ற பெயரில் இசை அமைத்த இரட்டையரில் ஒருவர்.
ஊமை விழிகளில் இவர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
ஆபாவாணன்.
தோல்வி நிலையென நினைத்தால் – ஊமை விழிகளில் இடம்
பெற்ற P.B.ஸ்ரீநிவாஸ்-ஆபாவாணன் பாடிய,ஆபாவாணம் எழுதிய, இந்தப் பாடலை அவர் கேட்கிறாரோ இல்லையோ நான்
கேட்கிறேன் இன்றும்.